சேலத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு

70பார்த்தது
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதியை இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் கல்லறை திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி இன்றைய தினம் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிருஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் தங்களது உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தியை எரிய விட்டு கிருஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் கிறிஸ்தவ ஆலயங்களிலும், கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதன்படி சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறைகளை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி