குரூப்-2 தேர்வு: 46 ஆயிரத்து 856 பேர் எழுதுகின்றனர்

71பார்த்தது
குரூப்-2 தேர்வு: 46 ஆயிரத்து 856 பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-2 தேர்வு வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று(செப்.6) நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -

சேலம் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 46 ஆயிரத்து 856 எழுத உள்ளனர். தேர்வு எழுத வசதியாக சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் மொத்தம் 162 தேர்வு மைங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும். தேர்வை கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்குத் தேர்வர்கள் செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதன்படி குரூப்-2 தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி