சமூக நீதி பேசும் திமுக திராவிட மாடல் அரசு பஞ்சமி நிலத்தை மீட்காதவரை திமுக ஆட்சிக்கு ஒரு கரும்புள்ளி தான் என சமூக சமத்துவப் படை கட்சி நிறுவனத் தலைவர் சிவகாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக சமத்துவ படை கட்சி ஒருங்கிணைக்கும் பஞ்சமி நில மீட்பு பயணம் குறித்த கூட்டம் சேலம் உடையாப ட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக சமூக சமத்துவப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் சிவகாமி ஐஏஎஸ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, பேசிய அவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் இல்லாத நபர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் பஞ்சமி நிலம் மீட்பு பயணம் பஞ்சமி நிலம் மீட்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார் சமூக நீதி அக்கறை கொண்ட இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய, 13 வருட காலமாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.
திமுக அரசு மக்களுக்கான அரசாக இல்லை என்றும், இலவச திட்டத்தைதான் செயல்படுத்துகிறது எனவும் குற்றம்சாட்டிய சிவகாமி, மக்களை சொந்த காலில் நிற்க விடாமல் தடுத்துக் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும் பஞ்சமி நில மீட்பு ஆணையத்தின் தலைவராக பதவியில் இருக்கும் நீதிபதியை நியமித்து பஞ்சமி நிலத்தை மீட்டெடுக்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், திராவிட மாடல் அரசு பஞ்சமி நிலத்தை மீட்காத வரை திமுக அரசுக்கு இது ஒரு கரும்புள்ளியே எனவும் கூறினார்.