விநாயகர் சதுர்த்தி விழா நாளை (செப் 7)நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இதனையொட்டி வினை தீர்க்கும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் விநாயகர் சதுர்த்தியன்று, களி மண்ணால்
செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொரி, பழங்கள் போன்ற பொருட்களைப் படைத்து; அருகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற
மலர்களால் அர்ச்சனை செய்து, விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.
இதற்காக சேலம் கடைவீதியில் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிலைகளை வாங்கி சென்றனர்.