சேலத்தில் ஓடும் பஸ்சில் திருட முயன்ற பெண் சிக்கினார்

56பார்த்தது
சேலம் அல்லிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா இவர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனி நிறுவனத்தின் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலை முடிந்து பவித்ரா வீட்டுக்கு செல்வதற்காக
ஓமலூரில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறி வந்துள்ளார்.
சேலம் கலெக்டர் அலுவலகம் பஸ் நிறுத்தத்தில் வந்த பொழுது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பவித்ராவை உரசிக்கொண்டு நின்று பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை கத்திரிக்கோல் கொண்டு வெட்டி தங்கச் செயினை பறிக்க முற்படும் பொழுது
செயின் ஊக்கு மூலம் சுடிதாரில் இணைக்கப்பட்டதால் செயினை இழுக்க முடியாமல் அந்த பெண் தடுமாறிய போது
சுதாரித்துக் கொண்ட பவித்ரா தங்கச் செயினை இருக்க பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் செயின் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து சேலம் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட பெண் புதுச்சேரி கோரி மேடு பகுதியை சேர்ந்த சாந்தி என்பது தெரிந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி