விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு அலங்காரம்

72பார்த்தது
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
சேலம் செவ்வாய்பேட்டை எலைட் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ வாசவி கல்யாண மண்டபத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் குறிப்பாக அமர்நாத் குகையில் விநாயகர் வீற்றிருப்பதை போன்றும், கண்ணாடி மாளிகையில் விநாயகர் அமர்ந்திருப்பதை போன்றும், கைலாயத்தில் கணபதி குடியிருப்பது போன்றும் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 44 வது ஆண்டாக விண்ணுலகையே மண்ணுலகுக்கு கொண்டு வந்ததை போல் டிஜிட்டல் திரை அமைப்பை கொண்டு உலக உருண்டை யின் மீது சிவன், பார்வதியான தனது தாய் தந்தையுடன் சேர்ந்து நடனமாடி அனைத்து கோள்களையும் சாந்தப்படுத்தி பூமியை வெப்பமயமாவதிலிருந்து தடுத்து பூமியில் உள்ள மக்களை காப்பாற்றும் விதமாக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சி படுத்தியுள்ளனர். இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி