சேலம் வழியாக செல்லும் மதுரை - பெங்களூரு கண்டோன்மெண்ட் மற்றும் பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் வந்து செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு நேற்று(செப்.6) வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரை - பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்-20671) கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்துக்கு மதியம் 12. 50 மணிக்கு வந்து 12. 52 மணிக்கு புறப்பட்டு சென்றது.
தற்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டு மதியம் 12. 30 மணிக்கு வந்தடைந்து, இங்கிருந்து 12. 32 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-20672) கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்துக்கு மதியம் 1. 55 மணிக்கு வந்தடைந்து, இங்கிருந்து 1. 57 மணிக்கு புறப்பட்டு சென்றது. வருகிற 15-ந் தேதி முதல் மதியம் 1. 43 மணிக்கு வந்தடைந்து, இங்கிருந்து 1. 45 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.