சேலம் அம்மாபேட்டை ராமமூர்த்தி தெரு பகுதியில் சுமார் 5 அடி உயர எட்டுக்கை மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையை அனுமதி பெறாமல் வைத்ததாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அதனை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த இளம் பெண் ஒருவர் திடீரென அருள் வந்து சாமி ஆட்டம் ஆடினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இளம்பெண் சாமியாடி ஆக்ரோசமாக சுவாமி சிலை எடுக்கக் கூடாது என ஆவேசம் அடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் செய்வதறியாது திகைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.