தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி சேலம் கோட்டை பகுதியில் நேற்று(செப்.6) ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அன்பரசு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜெயந்தி, மாநில செயலாளர் மாயகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் கலைவாணன் உள்பட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரியும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.