சேலத்தில் சட்டவிரோத மது விற்பனை ஜோர்..! - வைரல் வீடியோவால் போலீசுக்கு சிக்கல்

60பார்த்தது
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே அதிகாலை முதற்கொண்டு சந்து கடையில் மது விற்பனை நடைபெற்றுவருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தெருக்களில் சர்வசாதாரணமாக சந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சமூக விரோத கும்பல் அதிகாலை முதற்கொண்டு சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது சட்டவிரோத மது விற்பனை தொடர்பான காணொளி வெளியாகி காவல்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகி வரும் இந்த வீடியோவால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி