1985-ம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த சிவதாபுரம் குப்புசாமி குடும்பத்தினருக்கு சிவதாபுரம் மொரம்புகாட்டில் பா. ம. க. சார்பில் சொந்த வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடு கிரகபிரவேசம் நாளை(செப்.8) (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு குப்புசாமியின் மகன் செல்வராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் வீட்டை ஒப்படைக்கிறார்.
மேலும் வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் சூரமங்கலம் தர்மநகர் அம்மாபாளையம் பகுதியில் நடைபெறும் பா. ம. க. பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்த மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் சூரமங்கலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம். எல். ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் சேலம் வருகை தரும் அன்புமணி ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.