கோட்டை மாரியம்மன் தாலி கயிறு சிறப்பு அலங்காரம்

72பார்த்தது
கோட்டை மாரியம்மன் தாலி கயிறு சிறப்பு அலங்காரம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் வளர்பிறை முகூர்த்தநாளையொட்டி காலை அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

நேற்று(செப்.6) காலையில் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து விசேஷ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் தாலிக்கயிற்றால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை, தீபாராதனை நடந்தது. கோவில் தலைமை பூசாரி சிவக்குமார் சிறப்பு பூஜை செய்தார்.

இதில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் கொடிமரத்தில் மஞ்சள்கயிறு கட்டி வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், சில பெண்கள் கோவில் பின்புறம் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி