மேட்டூர் - Mettur

மேட்டூர் அணை நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணை நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம், 120 அடி. காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த ஜூலை 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 30ந்தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு 19ல் வினாடிக்கு, 19, 000 கனஅடியாக இருந்த நீர் திறப்பு, செப்டம்பர் 10ந்தேதி 23, 000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மீண்டும் கடந்த மாதம், 20ந்தேதி நீர்திறப்பு வினாடிக்கு, 20, 000 கனஅடியாகவும், 25லந்தேதி 15, 000 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. இதனால், 16 நாட்களுக்கு பின்பு நேற்று மாலை மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு, 12, 000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு, 7, 226 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, 5, 317 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால் நேற்று 91. 08 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று, 90. 28 அடியாக சரிந்தது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా