அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர் குறைதீர் குழுக்கள்: யுஜிசி
மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஏதுவாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் குறைதீர் குழுக்களை அமைக்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாணவர் குழுக்களின் விவரங்களை தங்களது பல்கலைக்கழகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களும் அந்த விவரங்களை ஒருங்கிணைத்து யுஜிசிக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.