எடப்பாடி - Edappadi

சேலம்: திமுக சார்பில் ரூ. 3 லட்சம் நிதி உதவி

சேலம்: திமுக சார்பில் ரூ. 3 லட்சம் நிதி உதவி

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் குப்பதாசன் வளவு பகுதியை சேர்ந்த மாணவி புனிதா, மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மேற்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் டி. எம். செல்வகணபதி எம். பி. , மாணவியின் தாய் ஆனந்தி, அக்காள் அகிலா ஆகியோருக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு தி. மு. க. சார்பில் ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும் புனிதாவின் அக்காள் அகிலாவின் படிப்பு செலவையும் தி. மு. க. ஏற்கும் என்றும் செல்வகணபதி எம். பி. கூறினார். அப்போது கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా