திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை: மஞ்சுவிரட்டு காளைகளுடன் முற்றுகை போராட்டம்

சிவகங்கை மாவட்டம் புதுவயல் பேரூராட்சியில் உள்ள மஞ்சுவிரட்டு திடலில் சாக்கோட்டை யூனியன் அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஞ்சுவிரட்டு காளைகளுடன் இன்று (அக்.,8) முற்றுகை போராட்டம் நடந்தது. புதுவயல் பேரூராட்சியில் சாக்கோட்டை யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான 35 ஏக்கர் இடம் உள்ளது. இதில், 3. 5 ஏக்கர் இடத்தில் புதிய யூனியன் அலுவலகம், 1. 5 ஏக்கர் இடத்தில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திடலில் பல ஆண்டுகளாக மஞ்சுவிரட்டு நடந்து வருவதாகவும் அவ்விடத்தில் அரசு அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று, புதுவயல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிவகங்கை மண்டல செயலாளர் சாயல்ராம் தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும், சாக்கை நாட்டார்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மஞ்சுவிரட்டு காளைகளுடன் ஊர்வலமாக சென்று சாக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்

சிவகங்கை
சிவகங்கை: மஞ்சுவிரட்டு காளைகளுடன் முற்றுகை போராட்டம்
Oct 08, 2024, 17:10 IST/திருப்பத்தூர்
திருப்பத்தூர்

சிவகங்கை: மஞ்சுவிரட்டு காளைகளுடன் முற்றுகை போராட்டம்

Oct 08, 2024, 17:10 IST