சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 223 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் உள்ள சிலைகளுக்கு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஒ எஸ் மணியன், நத்தம் விஸ்வநாதன், ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு, காமராஜ், கோகில இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதிர்சியில்லாமல் பேசிய வருகிறார் என்றும், மழை, வெள்ளம் பாதிப்புகளில் தமிழக அரசின் நடவடிக்கை சரியில்லை எனவும், ரூ 4000 கோடியை செலவு செய்தவர்களிடம் வெள்ளை அறிக்கை கேட்டால் அரசு தர மறுக்கின்றனர் என்றவர், தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனையாகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. தமிழகம் தான் போதையின் தலைநகரமாக திகழ்கிறது. விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டு விட்டது. இனி வரும் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் ஜோதிடம் பலிக்காது. 2026 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார்.