திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை: அதிகபட்சமாக 256 மீட்டர் மழை பதிவு

கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை , சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு பின் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. சிவகங்கை பகுதியில் 57மீட்டர் மழைப்பதிவும் மானாமதுரை பகுதியில் 21 மில்லி மீட்டரும் இளையான்குடி பகுதியில் 18மில்லி மீட்டர் மழைப்பதிவும் திருப்புவனம் பகுதியில் 9. 20 மில்லி மீட்டரும்திருப்பத்தூரில் 27. 00 மில்லி மீட்டரும்காரைக்குடியில் 19. மில்லி மீட்டர் மழைப்பதிவு தேவகோட்டை பகுதியில் 19. 60மில்லிமீட்டர் மழைப்பதிவும் காளையார் கோவில் பகுதியில் 58 மில்லி  மீட்டர் மழைப் பதிவும் சிங்கம்புணரி பகுதியில் 27. 20 மில்லி மீட்டரும்சராசரியாக மாவட்டம் முழுவதும் 28. 44 மில்லி மீட்டர் மழை பதிவும் அதிகபட்சமாக 256 மில்லிமீட்டர் மழை பதிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சிவகங்கை
Oct 16, 2024, 17:10 IST/காரைக்குடி
காரைக்குடி

காரைக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் திடீர் பணி நீக்கம்

Oct 16, 2024, 17:10 IST
கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பணியாற்றி வந்த முன்னாள் ராணுவத்தினர் 84 பேர் எவ்வித முன்னறிவிப்பின்றி செவ்வாய்க்கிழமை திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் ராணுவவீரரும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருமான தேவகோட்டை அருகே ஆந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த போ. சோலை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: முன்னாள் படை வீரரான நான் கடந்த வருடம் 16-10-2023 அன்று அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலம், தேவகோட்டைக் கிளையில் பாதுகாவலராகப் பணியமர்த்தப்பட்டேன். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை எந்த வித முன்அறிவிப்பும் இன்றி நேற்று வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறினார். என்னைப்போல கும்பகோணம் கோட்டத்தில் பணியாற்றிய முன்னாள் படை வீரர்கள் 84 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளோம். காரணம் தெரியவில்லை. இதனால் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்களும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளன. எனவே முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.