‘உங்கள் வரவு எளிய மக்களுக்கான நம்பிக்கை’ - நடிகர் சசிகுமார்

76பார்த்தது
‘உங்கள் வரவு எளிய மக்களுக்கான நம்பிக்கை’ - நடிகர் சசிகுமார்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது ‘X’ தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல் வாழ்த்துகள் விஜய் சார்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி