குருபூஜை தொடர்பாக ஆட்சியர் அவர்கள் கலந்து ஆலோசனைக் கூட்டம்

84பார்த்தது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தின அரசுவிழா, காளையார்கோவிலில் நினைவு அனுசரிப்பு, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா ஆகிய நிகழ்வுகளின் போது, கடைப்பிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுதல் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர ஆஷா அஜித், அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு வருகின்ற 24. 10. 2024 அன்று திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, கௌரவிக்கப்படவுள்ளது. அமைச்சர் பெருமக்கள் , பல்வேறுஅமைப்புக்களை சார்ந்த பொதுமக்களும் ஆகியோர் கலந்துகொண்டு, மாலைஅணிவித்துமரியாதை செலுத்தவுள்ளார்கள். அக்டோபர் 27-ஆம் தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர்களின் நினைவு அனுசரிப்பு , அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நிகழ்வுகளை முன்னிட்டு, மாவட்டத்திலிருந்து செல்லக்கூடிய வழிமுறைகள் குறித்தும், இன்று கலந்தாலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி