சிவகங்கை: சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம்

69பார்த்தது
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு, நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாகவும், 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாயக் கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) போன்ற தகுதிகளுடைய நபர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம்.

மேலும், ஏற்கனவே உறுப்பினராகப் பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து கொள்ளவும், புதுப்பித்தல் தவறிய உறுப்பினர்களை மீள வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும், புதிய உறுப்பினர்கள் சேர்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் ஆகியவை தொடர்பாக வருகின்ற 24. 10. 2024 அன்று முற்பகல் 11. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம், சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி