சிவகங்கை: அதிகபட்சமாக 256 மீட்டர் மழை பதிவு
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை , சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு பின் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. சிவகங்கை பகுதியில் 57மீட்டர் மழைப்பதிவும் மானாமதுரை பகுதியில் 21 மில்லி மீட்டரும் இளையான்குடி பகுதியில் 18மில்லி மீட்டர் மழைப்பதிவும் திருப்புவனம் பகுதியில் 9. 20 மில்லி மீட்டரும்திருப்பத்தூரில் 27. 00 மில்லி மீட்டரும்காரைக்குடியில் 19. மில்லி மீட்டர் மழைப்பதிவு தேவகோட்டை பகுதியில் 19. 60மில்லிமீட்டர் மழைப்பதிவும் காளையார் கோவில் பகுதியில் 58 மில்லி மீட்டர் மழைப் பதிவும் சிங்கம்புணரி பகுதியில் 27. 20 மில்லி மீட்டரும்சராசரியாக மாவட்டம் முழுவதும் 28. 44 மில்லி மீட்டர் மழை பதிவும் அதிகபட்சமாக 256 மில்லிமீட்டர் மழை பதிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.