திருப்பத்தூர் - Tiruppattur

வெள்ளி அன்ன வாகனத்தில் உற்சவர் அம்மன் பவனி

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா முன்னிட்டு ஏழாம் திருநாளில் உற்சவர் அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழா கடந்த 14ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது 10 நாட்கள் நடைபெறும். விழாவில் உற்சவர் அம்மன் பல்வேறு வாகனங்களில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஏழாம் திருநாளில் கோவில் திருநாள் மண்டபத்தில் உற்சவர் கண்ணுடைய நாயகியம்மன் சர்வ அலங்காரத்தில் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபம் கும்ப தீபம் ஏக முக தீபம் நாகதீபம் நட்சத்திர தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. நிறைவாக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணுடைய நாயகி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் மின்னொழியில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வீடியோஸ்