திருப்பத்தூரில் குருபூஜை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

63பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளான மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் நாள் திருப்பத்தூரிலும் அக்டோபர் 27ஆம் நாள் காளையார்கோவிலிலும் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 223 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவர்களுக்கென்று எழுப்பப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளாக வண்ணம் பூசுதல், விளக்குகள் அலங்காரம் போன்ற பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், குடும்ப வாரிசுதாரர்கள்,
முக்கிய பிரமுகர்கள், சமய இயக்க தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் மாமன்னர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்த அன்றைய தினம் வருகை தர இருப்பதால் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்தல், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல் போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடுபணிகளும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினம் சுமார் 1100 காவலர்களுக்கு மேல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :