மழை நீரால் ரயில் நிலையம் வரும் பயணிகள் அவதி.

60பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையம் முக்கிய நகரங்களுக்கு செல்லும் சந்திப்பாக இயங்கி வருகிறது.
காரைக்குடி ரயில்வே சந்திப்பின் வழியாக
திருச்சி, சென்னை, ராமேஸ்வரம், கோவை போன்ற தமிழக நகரங்களுக்கும்,
பெங்களூர், பாண்டிச்சேரி, வாரணாசி போன்ற வெளி , கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும்
தினமும் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இதனால் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக ரயில்வே சந்திப்பின் முன்புறம் மழைநீர் தேங்கி குளம் போல் மாறி உள்ளது.
மூன்று நாட்களாக மழை நீர் வடியாத நிலையில், பயணிகளை அழைத்துச் செல்ல வரும் ஆட்டோ, பேருந்து, இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
பயணிகளின் சிரமத்தை போக்க காரைக்குடி மாநகராட்சி நிர்வாகம் மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி