சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டியில் உள்ள மட்டி கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ள பெரியகண்மாய் ஆகும். இந்த கண்மாயிலிருந்து திறக்கப்படும் நீர் சுமார் 500 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு உபரிநீரை விவசாயிகள் கால்வாய் வழியே கொண்டு சென்று மட்டி கண்மாயில் சேர்த்தனர், மேலும் அந்த பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் ஆகியவற்றால் வடகிழக்கு பருவமழை துவங்கிய ஒரு வாரத்திற்குள் மட்டி கண்மாய் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், விவசாயம் செழிக்க வேண்டி தண்ணீரில்மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதே நேரத்தில் கண்மாய் பகுதிகளில் ஏராளமான முள் செடிகள் மற்றும் அடர்ந்து வளர்ந்துள் சீமை கருவேல மரங்களால் நீர் நிரம்பியதாகவும், எனவே புதர்களாக வளர்ந்துள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.