சிவகங்கையில் அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை வந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் விலக்கில் இருசக்கர வாகனமும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த நிலையில் இரண்டு இளைஞர்கள் கிழே விழுந்து கிடந்துள்ளனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் வலியில் துடித்துள்ளனர். இதை பார்த்த அமைச்சர் உடனடியாக காரில் இருந்து இறங்கி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அமைச்சரின் மனிதாபிமான செயலுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.