இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை விழா 30. 10. 2024 அன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் கீழடி அருங்காட்சியகத்திற்கும் வருகின்ற 30. 10. 2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், மருதுபாண்டியர்களின் 223 வது குருபூஜை விழா 27. 10. 2024 அன்று நடைபெற உள்ளதால், சிவகங்கை மாவட்டத்தில் 163 பாரதீய நியாய சன்ஹிதா 2023 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30. 10. 2024 அன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா மற்றும் மருதுபாண்டியர்களின் 223வது குருபூஜை விழாவிற்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு சென்றுவர அரசு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. மேலும், மேற்படி நிகழ்ச்சிகளில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு 27. 10. 2024 மற்றும் 30. 10. 2024 அன்று 35 சிறப்பு நிர்வாக நடுவர்களை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அவர்கள் இன்று இரவு 7: 30 மணியளவில் தெரிவித்துள்ளார்.