சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் , நாளை 223 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2 எஸ். பிக்கள் தலைமையில் 2081 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வெள்ளையர்களை எதிர்த்து வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 223 வது குருபூஜை விழாவானது அவர்களது நினைவிடம் அமைந்துள்ள காளையார்கோவிலில்நாளைஅனுசரிக்கப்படுகிறது. அஞ்சலி செலுத்த தென் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சமுதாய தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் வருவதுவழக்கம். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் சிவகங்கை எஸ். பி டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 2 எஸ். பிக்கள், 6 ஏ. டி. எஸ். பி, 20 டி. எஸ். பி, 58 இன்ஸ்பெக்டர், 291 எஸ். ஐ 1704 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் 23 நான்கு சக்கர பாட்ரோல், 49 இரு சக்கர பேட்ரோல்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 7 அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட சோதனை சாவடிகள் உட்பட 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளியூர்வாகனங்கள் வந்து செல்ல தனி , தனிவழித்தடங்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. , வாகனங்களில் வெளிப்புறங்களில் தொங்கியபடி வருபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்எனஎச்சரிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 6 சிறப்பு சோதனை சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது