சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதனை ஒட்டி, பிரான்மலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கால்வாய் வழியாக அப்பகுதியில் இருக்கும் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது , அப்படி தண்ணீர் செல்லும் இடங்களில் அப்பகுதியில் உள்ள பெரியவர்கள் இளைஞர்கள் பழங்கால முறைப்படி பனை மரத்தில் ஓட்டை போட்டு கால்வாய்களில் வரும் தண்ணீர் அருகே மண்ணில் பதித்து வைக்கின்றனர், பனை மரத்தின் ஓட்டை வழியாக விழும் தண்ணீரில் எதிர்புறமாக மீன்கள் துள்ளி குதித்து, தண்ணீர் விழும் அருகில் அதற்காக வைக்கப்பட்டு இருந்த பாத்திரத்ததில் விழுகின்றன, இதில் கெண்டை, கெளுத்தி , அயிரை, போன்ற பல்வேறு வகையான நாட்டு வகை மீன்கள் கிலோ கணக்கில் கிடைக்கின்றன , அதை அப்பகுதிகளில் இருக்கும் மக்கள் இரவு பகலாக பிடித்து சொந்த பந்தங்களுக்கு கொடுத்து சமைத்து ருசித்து சாப்பிடுகின்றனர்.