திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

1947ஆம் வருட தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான, 2018ஆம் ஆண்டு சட்ட திருத்தம் (சட்ட எண். 27/2018) மற்றும் 2023 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் (சட்ட எண். 21/2023) மூலம் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அசாதாரண அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இச்சட்டதிருத்தம் அமலுக்கு வரும் நாள் 02. 07. 2024 என அரசால் அறிவிக்கை செய்யப்பட்டு, அசாதாரண அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 02. 07. 2024க்கு பின்னர், புதிதாக கடை மற்றும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, பத்து அல்லது பத்துக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பதிவிற்கான விண்ணப்பத்தினை தொழிலாளர் நலத்துறையின் இணையவழி தளமான https: //labour. tn. gov. in என்ற இணையவழி முகவரியில், Form-Y-ல் பதிவுக் கட்டணமாக ரூ. 100/- செலுத்தி, கடை மற்றும் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். அவ்வாறாக விண்ணப்பித்து, விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவுச் சான்று படிவம்-Z-ல் இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு, 24 மணி நேரத்திற்குள் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்

சிவகங்கை
Oct 17, 2024, 17:10 IST/திருப்பத்தூர்
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

Oct 17, 2024, 17:10 IST