வால்பாறை - Valparai

கோவை: கஞ்சா விற்ற எலக்ட்ரீசியன் உட்பட 4 பேர் கைது

கோவை: கஞ்சா விற்ற எலக்ட்ரீசியன் உட்பட 4 பேர் கைது

கோவை வடவள்ளி போலீசார் நேற்று (செப்.,30) ரோந்து சென்றனர். அப்போது மருதமலை அடிவாரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கல்வீரம்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், வடவள்ளி போலீசார் லிங்கனூர் ரோட்டில் சந்தேகத்தில் 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்தபோது 3 பேரும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற வடவள்ளி தென்றல் நகரை சேர்ந்த சபரிகிரி(27), தொண்டாமுத்தூரை சேர்ந்த முகமத் இஸ்மாயில்(24), வடவள்ளி காளிதாஸ் நகரை சேர்ந்த கோகுல்(27) ஆகிய 3 பேரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
ஆபத்தான நீர்நிலைகளில் குளிக்காதீங்க.. மாணவர்களுக்கு அறிவுரை
Oct 02, 2024, 02:10 IST/சிங்காநல்லூர்
சிங்காநல்லூர்

ஆபத்தான நீர்நிலைகளில் குளிக்காதீங்க.. மாணவர்களுக்கு அறிவுரை

Oct 02, 2024, 02:10 IST
வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மழைகாலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாணவர்கள் செய்ய வேண்டியவை உட்பட, வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை துார்வாரி மூடுவது, குழிகளை நிரப்புவது மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏரி, ஆறு, குளங்களில் மாணவர்கள் குளிப்பதை தவிர்க்கவும். வெள்ளம் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே, மாணவர்கள் வேடிக்கை பார்க்க அனுமதிக்கக் கூடாது என பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.