நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்!

52பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறையில் நகர மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. வால்பாறையில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 21 வார்டு கவுன்சிலர்களும் அதில் இரண்டு பேர் தலைவர் மற்றும் துணைத் தலைவராக உள்ளனர். மதியம் 12 மணி அளவில் துவங்கப்பட்ட நகர மன்ற கூட்டத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட 8 பேர்கள் மட்டுமே பங்கு பெற்றனர். மற்ற 13 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வராமல் இருந்தனர். தமிழக அரசின் நிதி நெருக்கடி காரணத்தினால் நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளை சென்னை மண்டல இயக்குனர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று பணிகளை செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வால்பாறையில் ஒரு வருட காலமாக அதிகமான வளர்ச்சிப் பணிகள் செய்யவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மாதம் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கூறிய கவுன்சிலர்கள் வால்பாறை மக்கள் எங்களை நம்பி எங்களுக்கு ஓட்டு போட்டு எங்களை கவுன்சிலராக தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்களுக்கு பணி செய்ய நாங்கள் தயாராக உள்ள நிலையில் அரசு அதிகாரிகள் பணிகளை செய்யவிடாமல் அலட்சியப்படுத்துகின்றனர். இதை வலியுறுத்தி நாங்கள் இன்று நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்தோம் என்று கூறியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி