கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் குரும்பபாளையம் அருகே சென்று சோதனை மேற்கண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் காஹிர் (32) என்பவரை இன்று கைது செய்து அவரிடமிருந்து 1. 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.