வால்பாறை பகுதியில் இன்று (செப்டம்பர் 30) திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால், அய்யர்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வால்பாறை வட்டாரப் பகுதிகளான அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், உறங்குடி, தாய்முடி, சேக்கல் முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிகள் வால்பாறை, சிங்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.
ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் அங்கலக்குறிச்சி மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும். இதனால் அவ்வப்போது மின்தடை ஏற்படலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின் பாதைகளுக்கு அருகே உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.