குரங்கமை நோய் - விமான நிலையத்தில் அமைச்சர் விளக்கம் !!

70பார்த்தது
கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுபிரமணியன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்திருக்கும் பொது மருத்துவர் அவசர அறிவிப்பில் குரங்கமை நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக தெரிவித்திருக்கிறார் ஐரோப்பிய நாட்டில் துவங்கிய இந்த பாதிப்பு உலகம் முழுவதும் தற்போது 123 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் குரங்கம்மை நோய் பாதிப்பு குறித்து ஆய்வு தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. சென்னை மதுரை, கோவை திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணித்து அவர்களுக்கு குரங்கமை பாதிப்புக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி