குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்!

85பார்த்தது
வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று மதியம் பட்டப்பகலில் இரண்டு காட்டு யானைகள் சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. அங்குள்ள வாழை மரங்களை சாப்பிட்ட பின், தேயிலை தோட்டம் வழியாக பிரதான சாலையைக் கடந்து மீண்டும் குடியிருப்பு வழியாகச் சென்று, தேயிலை தோட்டத்தில் நின்றன. இதைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்து, இரண்டு யானைகளையும் வனப் பகுதிக்கு விரட்டினர். காட்டு யானைகள் பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். இந்த யானைகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி