கோவை: சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இளைஞர் மூழ்கி உயிரிழப்பு
கோவை பேரூர், குனியமுத்தூர் அருகே திருநகர் காலனியைச் சேர்ந்த கதிரேசன் (40) என்பவர், நேற்று (ஜனவரி 1) புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பருடன் பேரூர் அருகேயுள்ள சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஆற்றுக்குள் குதித்தபோது மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.