கோவை: பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து அறிவிப்பு வெளியீடு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த விவரங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அரசாணையில், "அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும். மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகளையும் சேர்த்து வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.