ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தற்போது வழங்கி வரும் 5G திட்டங்களை விட 15% குறைவான விலையில் சேவையை வழங்க Vi (Vodafone idea) நிறுவனம் முடிவு செய்துள்ளது. தனது போட்டி நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் Vi நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக வரும் மார்ச் மாதம் இந்தியாவில் 75 நகரங்களில் Vi 5G சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.