மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த உத்கர்ஷ் தகோலே என்ற 25 வயது இளைஞர் தனது பெற்றோர்களான லீலாதர் தகோலே (55), அருணா தகோலே (50) ஆகியோரை டிசம்பர் 26ஆம் தேதி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த விவகாரம் ஜனவரி 1-ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கல்லூரி தேர்வில் அடிக்கடி பெயில் ஆனதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உத்கர்ஷ் தனது பெற்றோரை கொன்றுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.