புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிந்ததால் கோவில் வளாகம் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோவில் நிர்வாகம் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதித்ததால் இருசக்கர வாகனங்களில் வந்த பக்தர்கள் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவில் உள்ளேயும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பல மணி நேரம் காத்திருந்துதான் சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும், பக்தர்கள் தங்களது குறைகளைத் தீர்த்துக்கொள்ளும் நம்பிக்கையில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை புத்தாண்டு அன்று தரிசனம் செய்து சென்றனர்.