கோவை: மயூரா ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு!

76பார்த்தது
கோவை விமான நிலையத்தில் கடந்த வாரம் 17ஆம் தேதி காங்கிரஸ் நிர்வாகி வேணுகோபாலை வழி அனுப்ப வந்த மயூரா ஜெயக்குமார் மற்றும் கட்சியின் மாநில செயலாளர் கோவை செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மயூரா ஜெயக்குமார் கோவை செல்வம் உள்ளிட்டோரை கடுமையான வார்த்தைகளால் பேசினார். இந்நிலையில் பீளமேடு காவல் நிலையத்தில் காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது ஐ. என். டி. யு. சி தொழிற்சங்க மாநில பொது செயலாளர் செல்வம் பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது காவல்துறையினர் மிரட்டுதல், lஆபாச வார்த்தைகளால் பேசுதல் உட்பட இருவேறு பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி