கோவை: பல்கலைக்கழகத்தில் காட்டு யானை புகுந்த சம்பவம் வைரல்!

73பார்த்தது
காருண்யா வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று காலை ஒரு காட்டு யானை புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சுவரை தாண்டி உள்ளே நுழைந்த யானை, மாணவர்கள் பயிரிட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை பல்கலைக்கழக வளாகத்தில் முகாமிட்டிருந்த யானை, மீண்டும் சுற்றுச் சுவரை தாண்டி காட்டுக்குள் சென்றுள்ளது. இந்த சம்பவத்தை விவசாயி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி