ஆந்திர மாநிலம், அனந்தபூரில் தனது தோழி புத்தாண்டு வாழ்த்து சொல்லாததால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். சின்னதிப்பம்மா என்ற அந்த மாணவி தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். தன்னுடன் படிக்கும் சக தோழி புத்தாண்டு தினத்தன்று வாழ்த்து கூறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்னதிப்பம்மா புத்தாண்டு அன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.