பேரூர்: ஆண்டின் கடைசி சனி பிரதோஷம் - அலைமோதியது கூட்டம்

79பார்த்தது
கோவை மாவட்டத்தின் முக்கிய திருக்கோயிலாக விளங்கும் பட்டீஸ்வரர் கோயில் மேல் சிதம்பரம் எனும் வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். இங்கு தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 28) ஆண்டின் கடைசி சனிப்பிரதோஷம் என்பதால் காலை முதலே பக்தர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு தரிசனம் செய்ய அதிக அளவில் வந்தனர். சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு பால் அபிஷேகம் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிக அளவில் கூட்டமாக நின்று நந்தி பூஜையை வழிபாடு செய்தனர். பின்னர் பட்டீஸ்வரர், பச்சைநாயகி சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி