பேரூர்: சங்கலி பறிப்பு - பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சங்கலி பறிப்பில் ஈடுபட்ட விஷ்ணு (29) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (டிசம்பர் 19) உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின்படி சிறையில் இருக்கும் வழிப்பறி வழக்கு குற்றவாளியான விஷ்ணுவிடம் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது.