கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரனிடம், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர். ஜெயராம் நேற்று கோரிக்கை மனு வழங்கினார். சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் எம்எல்ஏ கே. ஆர். ஜெயராம் தனது மனுவில் கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உடனடியாக தீர்வு காண ஆவணம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.