கோவை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மதுக்கரை, குரும்பபாளையம் தடுப்பணையில் மழைநீர் நிரம்பியுள்ளது. ஆனால், இந்த மழைநீரில் மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கலக்கும் சாக்கடை கழிவுகள் காரணமாக, தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரில் மலைபோல் நுரை தோன்றி உள்ளது.
இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், கால்நடைகள் மற்றும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி, தடுப்பணையை தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள மற்ற குளங்களை போல, இந்த தடுப்பணையையும் தூய்மைப்படுத்தி, கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.