ஆலந்துறை: ஈஷா வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) சார்பில் கோவை ஆலந்துறை பகுதியில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தியும் நேற்று(நவம்பர் 21) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈஷா யோகா மையம் மீது இயற்கை வளக் கொள்ளை, வனங்கள் அழிப்பு, நில அபகரிப்பு, காலாவதியான மருந்துகளை மருத்துவ முகாம்களில் வழங்குதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக AIDWA குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் AIDWA-வின் மாநில பொதுச் செயலாளர் ராதிகா, அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி, மாநிலத் தலைவர் வாலண்டினா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, ஈஷா யோகா மையத்தை கண்டித்தும், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி